இலங்கை செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
09 Oct,2021
இலங்கை செல்லும் பயணிகள் வரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே, சுங்கத் தீர்வை இல்லாத (Duty-Free)கொள்வனவுகளை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய கூறியுள்ளனர்.
கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் இலங்கை செல்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, விமான நிலையத்திற்கு வந்திறங்கும் (முழுமையாக தடுப்பூசி பெற்ற) சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில், அனுமதி பொறிக்கப்பட்ட பயணிகளுக்கு சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக் கொள்வனவுகளை பயணிகள் வேறொரு நாளில் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இது தொடர்பில் விமான நிலையத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
விமான நிலையத்திற்கு வந்திறங்கும், முழுமையான தடுப்பூசி பெற்ற சுகாதார அலுவலகத்தினால் தடுப்பூசி சான்றிதழில் அனுமதி பொறிக்கப்பட்ட சிவப்பு முத்திரரை பயணிகளை சுங்கத் தீர்வை இல்லாத கொள்வனவுகளை வரவேற்கின்றோம்.
முழுமையான தடுப்பூசி பெற்று வரும் பயணிகள் தாங்கள் வரும் போதே சுங்க தீர்வை இல்லா கொள்வனவுகளை செய்ய அனுமதிக்க படுவார்கள். மற்றும் இக்கொள்வனவுகளை வேறொரு நாளில் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை குறிப்பிடப்பட்டுள்ளது.