கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழப்பு – புதிதாக 878 பேருக்கு தொற்று!
22 Sep,2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவரும் 60 வயதுக்கு குறைவான 19 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 71 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 8 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 35 ஆயிரத்து 22 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 60 ஆயிரத்து 902 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.