இத்தாலி தேர்தலில் போட்டியிடும் 4 இலங்கையர்கள்
24 Aug,2021
இத்தாலி தேர்தலில் போட்டியிடும் 4 இலங்கையர்கள்
இத்தாலியில் நடைபெறவுள்ள நகர சபைத் தேர்தலில் அங்கு வாழும் இலங்கையர்கள் நால்வர் போட்டியிடவுள்ளனர்.
இத்தாலியின் பிரதான நகராமாக கருதப்படும் மிலான நகரில் இடம்பெறும் தேர்தலில் முதல் முறையாக இவர்கள் போட்டியிடவுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நகர சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையர்களான இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் போட்டியிடுகின்றனர்.
ஜீ.ஏ.ரோய் அபேசேகர, தம்மிக்க சந்தசேகர, சட்டத்தரணி கிறிஸ்டினா ஜித்மி மற்றும் கிறிஸ்டோபர் தம்பகே ஆகிய நால்வருமே இவ்வாறு போட்டியிடவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.