இலங்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
23 Aug,2021
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியுள்ளது.
கொவிட் -19 தொற்று காரணமாக இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் துபாய் மற்றும் அபுதாபி இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.