குருநாகலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து சிறுவன் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு!
08 Aug,2021
குருநாகலை மாவட்டம் – கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹன்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து ஆண், பெண் மற்றும் 10 வயதான சிறுவன் ஆகிய 3 பேர் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த வீடு இன்று காலை சோதனைக்குட்படுத்தப்பட்டபோதே சடலங்கள் அடையாளம் கண்டு மீட்கப்பட்டன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 28 வயதான பெண், அவரது 10 வயது மகன் மற்றும் 28 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டவர்களாவர்.
வாய்த்தர்க்கத்தை அடுத்து பெண் மற்றும் சிறுவனைக் கொலை செய்துவிட்டு குறித்த ஆண் தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சந்தேகிப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொலைகள் இடம்பெற்ற இடத்துக்கு நீதிவான் இன்று நேரில் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார். இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்