ஆறு ஆண்டுகளின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட விமானசேவை
01 Aug,2021
ஷ்யாவில் டெல்டா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பல்வேறு கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லயன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்கலாக 51 பயணிகள் குறித்த விமானத்தில் ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளனர். இந்த விமானம், வெள்ளிக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோ நோக்கி பயணமாகவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக உறவுகள் பேணப்பட்டுவருவதாகவும் வர்த்தகம், சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் நட்புறவு காணப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரண கூறியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவையானது, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் இரண்டு நாடுகளுக்கும் வாய்ப்பை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் அடிக்கடி பயணம் செய்வோருக்கு பல்வேறு சலுகைகளையும் ஸ்ரீலங்கா எயார் லயன்ஸ் நிறுவனம் வழங்குவதாகவும் அசோக் பத்திரண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ச்சி கண்டுவரும் ஸ்ரீலங்கா எயார் லயன்ஸ் வலையமைப்பில் மொஸ்கோவையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.