வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்!
01 Aug,2021
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வேண்டுகோளின் பிரகாரம் தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனிநபர் தடுப்பூசி அட்டை, கடவுச்சீட்டு, உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் சுகாதாரவைத்திய அதிகாரியினால் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி சான்றிதழ் இன்றி பிரவேசிப்பதற்கு ஒரு சில நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் உலகின் பல நாடுகள் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்டவர்களுக்கு பயண அனுமதியினை வழங்கியுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.