சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க அனுமதி!
27 Jul,2021
ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து புதிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து புதிய சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை பெற வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.