ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன்’
20 Jul,2021
`தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக` ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் 03 வருடங்கள் அன்றி, அதன் பின்னரும் 05 வருடங்கள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.