உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ள கொழும்பு
16 Jul,2021
கொழும்பில் டெல்டா திரிபு உள்ளிட்ட கொரோனா வைரஸ் திரிபுகள் பரவாமல் இருக்க கொழும்பு நகரம் அதிக எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்களாவர்..
அதேநேரம் கொரோனா திரிபுடையவர்கள் என்ற சந்தேகத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு நகரை உயர் எச்சரிக்கையுடன் வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் பிலியந்தலை பகுதிகளில் டெல்டா பரவியுள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது.