இலங்கையில் கரை ஒதுங்கிய இந்திய நாட்டுப்படகு
15 Jul,2021
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் பதிவு இலக்கம் , உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில் சிறிய உடைவுகளுடன் குறித்த நாட்டுப்படகு கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா? அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.