மச்சாளை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸ் அதிகாரி!
12 Jul,2021
தனது 14 வயது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபத்திரண தெரிவித்தார்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் ஜூலை 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களை சொந்த உறவினர்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி விழிப்புடன் இருக்குமாறு சிறுவர் அதிகாரசபை கேட்டுக்கொள்கிறது.