ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் : பசில் ராஜபக்ஷ
10 Jul,2021
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
கட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.