வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!
09 Jul,2021
நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் அனைத்து வகை விசாக்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த காலை எல்லை எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு விசாக்களின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.