15 வயது சிறுமி விவகாரம்; முன்னாள் அமைச்சர் கைது
06 Jul,2021
இலங்கையில் சிறுமியொருவர் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மாலைத்தீவின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் மாநில நிதி அமைச்சரும், டிராகுவின் முன்னாள் தலைவருமான முகமது அஷ்மாலி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 45 வயதான மாலத்தீவு நாட்டவர், முன்னாள் மாநில அமைச்சர் அஷ்மாலி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மிஹாரு செய்தி வெளியிட்டுள்ளது.