கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹாவில் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா
29 Jun,2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய ஆயிரத்து 890 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் 198 பேருக்கும் கொழும்பு மாவட்டத்தில் 194 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 121 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.