கிளிநொச்சில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 25 பேருக்கு திடீர் சுகவீனம்!
26 Jun,2021
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, நேற்றுகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள், இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் தொழிற்சாலை வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள், தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.