மீண்டும் நாட்டை மூடுவது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்
22 Jun,2021
மூன்று நாட்களுக்கு நீக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை (23) இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) கூறினார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அன்று அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த பயணக்கட்டுப்பாடு மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.
வருகின்ற பொசன் திருவிழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.