இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 67- பேர் உயிரிழப்பு
15 Jun,2021
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்நாட்டில் ஜுன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,284- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக 67 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 33,255- பேர் சிகிச்சையில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,203- ஆக உயர்ந்துள்ளது.