இணையம் வழியாக பாலியல் தொழிலுக்கு 16 வயது சிறுமி விற்பனை – கொழும்பில் சம்பவம் !
10 Jun,2021
குறித்த நபர் பல வாடிக்கையாளர்களுக்கு குறித்த சிறுமியை விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் கல்கிஸ்சையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் தாயிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடந்த மூன்று மாதங்களாக சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதே நேரத்தில் குறித்த சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.