இலங்கை உட்பட ஏழு நாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸிற்குள்தடை
03 Jun,2021
இலங்கை உட்பட ஏழு நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸிற்குள் பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருபவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமுலில் இருந்த தடை நேற்று நிறைவுக்கு வந்திருந்த போதிலும், மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.