இலங்கைக்கான தடுப்பூசிக்கு கையை விரித்த இந்தியா!! நடுவீதியில் 6 இலட்சம் மக்கள்!!
29 May,2021
கோவிட் பெருந்தொற்றில் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றுவதற்கென்று சுமார் 9 இலட்சம் முதற்கட்ட BBV152 -Covaxin தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது இந்தியா.
இலங்கையில் சுமார் 6 இலட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பிவைப்பதில் இழுத்தடிப்பைச் செய்துவருகின்றது இந்தியத் தரப்பு.
இந்தியாவில் கொறோனா பெருந்தொற்று அதிகமாகி வருவதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என்று இந்தியத் தரப்பு கூறுகின்றது.
ஆனாலும், இலங்கையில் அதிகரித்துவரும் சீனத் தலையீடுகள் மற்றும் போட்சிட்டி விவகாரம் இந்தியாவின் இந்தப் பின்னடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது இராஜந்திர வட்டாரங்கள்.
இந்தியாவின் Covaxin தடுப்பூசிகளை முதற்கட்டமாக ஏற்றிக்கொண்ட 6 இலட்டசம் இலங்கையர்களின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது.