அமெரிக்காவின் திட்டத்தினுள் இலங்கை? வெளியானது அறிவிப்பு!
23 May,2021
தமது நாட்டின் கோவிட் தடுப்பூசி பயனாளி நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் நான்சி வொன்ஹார்ன் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021, ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவுக்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் சுமார் 13 சதவீதத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்க அரசாங்கம் விரும்புகிறது.
இந்த தடுப்பூசிகள் சமமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய கோவக்ஸ் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொது சுகாதார தரவுகள் பின்பற்றப்படும். இந்த நிலையில் எந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் என்பது தொடர்பில் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நான்சி வொன்ஹார்ன் குறிப்பிட்டுள்ளார்.