இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
21 May,2021
2.1 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 2000-க்கும் அதிமாக உள்ளது. மே 21 முதல், அடுத்த பத்து நாட்களுக்கு வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
2021 ஏப்ரலில் சுமார் 4000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் கொரோனாவிற்கு பலியாகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 38- பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இலங்கையில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இலங்கையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,089- ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இந்தியா நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் பணியில், இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.