வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை
19 May,2021
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.