பெண்கள் விடுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம்
10 May,2021
கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரையே இவ்வாறு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையிலுள்ள பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றறது.
இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுவரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.