4000 தொற்றாளர்களுக்கு மருத்துவமனையில் இடமில்லை! - வீடுகளிலேயே சிகிச்சை.
07 May,2021
நாடு முழுவதும் உள்ள சிகிச்சை மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையால் 4,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் இன்னமும் தங்கள் வீடுகளிலேயே தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, தற்போது நாட்டில் மொத்தம் 17,795 கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.
இருப்பினும், 13,043 கொரோனா தொற்றாளிகள் மட்டுமே அரசாங்க நிலையங்களில் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 4,752 கொரோனாத் தொற்றாளிகள் இன்னும் மருத்துவமனைகள் அல்லது சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படவில்லை.
இதற்கிடையில் நேற்று மொத்தம் 1,895 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில், கொழும்பு மாவட்டத்தில் 326 பேரும்;, களுத்துறை மாவட்டத்தில் 309 பேரும், கம்பஹா மாவட்டங்களில் 279 பேரும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.