கொரோனாவுக்கு 11 பேர் பலி, புதிதாக 1636 பேருக்கு தொற்று!
01 May,2021
இலங்கையில் நேற்று மட்டும் 1636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஒரேநாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதுவாகும்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 146ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667ஆக உள்ள நிலையில், இன்னும் 11 ஆயிரத்து 504 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.