இலங்கையில் உச்சம் தொட்ட கொரோனா
29 Apr,2021
இலங்கையில் ஒரே நாளில் அதிகப்படியான கொவிட் 19 நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, சற்றுமுன்னர் நாட்டில் மேலும் 463 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினத்தில் (28) மாத்திரம் 1,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய இலங்கையில் ஒரு இலட்சத்து நான்காயிரத்து 938 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 227 பேர் இன்று (28) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 6 கொவிட் 19 மரணங்கள் பதிவான நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.