இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்; முன்னாள் மந்திரி, அவரது சகோதரர் கைது
25 Apr,2021
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் வெளிநாடுகளை சேர்ந்த 40 பேர் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 100க்கும் கூடுதலானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டின் முன்னாள் தொழில் மற்றும் வர்த்தக துறை மந்திரி ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் ஆகிய இருவரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்டனர் என இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சூழல் மற்றும் அறிவியல் சான்றுகள் ஆகியவற்றை நாங்கள் வைத்திருக்கிறோம் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.