இலங்கையில் அதிக சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா வைரஸ்: 3ஆவது அலை எச்சரிக்கை
25 Apr,2021
இலங்கையில் சக்தி வாய்ந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலவேறு நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இந்தியா பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்டைநாடான இலங்கையில் தற்போது கண்றியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிக சக்தி வாய்ந்தது எனவும், வேகமாக பரவக்கூடியது என்றும் இலங்கை நோய் எதிர்ப்புத்துறை தலைவர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின்னர், இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸால் அதிப்படியான இளைஞர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் 3ஆவது அலையை உருவாக்கக்கூடும் என சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.