விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது
17 Apr,2021
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் இத்தகையதொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.