ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு 5 கோடி ரூபா கொடுத்த இப்ராஹிம்!
11 Apr,2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
குண்டுத் தாக்குதலை நடத்த முதல் தடவையாக இப்ராஹிம் 50 மில்லியன் செலவிட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் இவ்வாறு வழங்கப்பட்ட நிதியில் 30 மில்லியன் சஹரனிடமும் அவரது நண்பர்களிடம் இருந்ததாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு விவாதத்தில் பேசியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதேவேளை சந்தேகநபர்களுக்கு எந்த விதத்திலும் அரசாங்கம் நிதி உதவியை வழங்கவில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதன்படி குறுகிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்டும் என்றும் தீவிரவாதிகளின் கொள்கைகளை பரப்புவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.