இலங்கை யாழ்ப்பாணத்தில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு சீல்
09 Apr,2021
இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன்படி, கொரோனா தொற்று ஏற்பட்ட 70 வர்த்தக நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு யாழ்ப்பாண சுகாதார மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர்.
இவை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஏனைய வர்த்தக நிறுவனங்களை திறக்க அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. மேலும், யாழ்ப்பாணம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இத்துடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.