விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு
01 Apr,2021
ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அலுத்கமகே முன்னிலையில் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் குறிப்பிட்டு ரிஷாட் பதியுதீன் கடந்த மார்ச் 09 ஆம் திகதி மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.