பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை
25 Mar,2021
மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் மட்டுமே விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பேரவையில் தெரிவிக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைத் நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வு குறித்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற இந்தியா நேற்று அழைப்பு விடுத்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் அடுத்த கூட்டத்தில் அமைச்சரவை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.