குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார் பிரியங்க பெர்னாண்டோ
20 Mar,2021
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டா, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, சைகை ஊடாக பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தல் விடுத்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இத்தகைய நிலையிலேயே தற்போது பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.