இராணுவ விதிகளைப் போல நாட்டை ஆள முடியாது! சரத் வீரசேகரவிற்கு பதிலடி
18 Mar,2021
மத்ரஸா பள்ளிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார் இராணுவ விதிகளைப் போல நாட்டை ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல் கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மத்ரஸா பள்ளிகள், பௌத்த தர்ம பள்ளிகள், பிரிவேனாக்கள் போன்ற பள்ளிகளாக இருக்கின்றன. தனிநபர்களாக அவர்கள் கூறும் எல்லாவற்றையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையிலும் தடை செய்ய முடியாது. தேவையற்ற பள்ளி கற்பித்தல் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.
நாட்டின் தவறான தேசபக்தியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தவில்லை. தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்க விரும்புகின்றேன்? இந்த தூதுவர் குழு இந் நாட்களில் ஏன் நாடு முழுக்க பேகின்றனர்.
நாட்டில் இந்தியாவின் கட்சியை ஸ்தாபிக்க இந்த அரசாங்கம் விரும்பினாலும் இலங்கையை தேவைக்கேற்ப ஆட்சி செய்வதற்கான இந்த சதித்திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துவோம், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக அடிமட்ட அளவில் ஒரு போராட்டத்தைத் தொடங்க தயாராகி வருகிறோம்.
இந்த அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமல்ல, தேர்தல்களிலும், தினசரி அடிப்படையிலும் பொய்களை கூறும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.