இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் அவசியமில்லை: அமைச்சர் சரத் வீரசேகர
14 Mar,2021
மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித தீர்மானமும் தற்போது எடுக்கவில்லை என பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் 9 மாகாணங்களுக்கும் தனித்தனி சட்டம் இருக்க முடியாது. மாகாண சபை தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை. நாம் புதிய யாப்பு தயாரிப்போம். மத்திய அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்களை வைத்துக் கொண்டு செய்தால் சிறப்பு” என சரத் வீரசேகர தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறே ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த 45 உடல்கள் அடக்கம் : சவேந்திர சில்வா
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தொற்றால் உயிரிழந்த 45 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, கொரோனாவால் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.