ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்ற அரசாங்கம் முயற்சி-
10 Mar,2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், காப்பாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
மேலும், குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.