பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
07 Mar,2021
நாட்டில் இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது ஆயிரத்து 682 ஆக காணப்பட்டுள்ளது.
எனினும் கடந்த பெப்ரவரி மாதத்தை பொருத்தவரையில் நாட்டிற்கு வருகைத்தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 3 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் 2020 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 99.3 வீதத்தினாலும் பெப்ரவரி மாதத்தில் 38 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.