ஆஸி.யில் பஸ் டிரைவராக வேலை பார்க்கும் இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர்
03 Mar,2021
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் , ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சென்னை அணி வீரருமான சூரஜ் ரந்திவ் ஆஸ்திரேலியாவில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் சுழல் பந்து வீரர் சூரஜ் ரந்திவ்,37, இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பஸ் ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான டிரன்ஸ்டெவ் என்ற பஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவரை போன்று சிந்தகா ஜெயசிங்கே என்ற மற்றொரு இலங்கை வீரர், மற்றும் ஜிம்பாப்வே நாட்டின் வீரர் ஆகியோரும் பஸ் டிரைவர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது.
சூரஜ் ரந்திவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகள், 31 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகள், மற்றும் 7 டுவனெ்டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் ஐ.பி.எல். சென்னை அணியிலும் 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.