கொழும்பில் பெண் கொலை - சந்தேகநபரும் சடலமாக மீட்பு
03 Mar,2021
கொழும்பு,டாம் வீதியில் பயணப் பைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி (வயது -51) ஒருவரே, படல்கும்புர பகுதியில் வைத்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், சடலத்திற்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.