சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை -
28 Feb,2021
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தொடர்புள்ள அனைவருக்கும் தமது ஆட்சியில் சர்வதேச விசாரணை அல்லது உள்நாட்டு விசாரணை மூலம் தண்டனை அளிக்கப்படுவது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையானது பூரணமானது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை உரிமைகோர இன்று எவரும் முன்வராத நிலைமையே காணப்படவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டார்.