நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464ஆவடக்கில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஏழு பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட, 81 வயது வயோதிபப் பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 15 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேலும் 150 கைதிகளிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பி.சி.ஆர். முடிகள் நாளையே கிடைக்கும் எனவும் மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.க அதிகரித்துள்ளது.
சடலங்களைப் புதைப்பது தொடர்பான வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்
கொரோனாவால் மரணித்தவர்களின் சடலங்களை எரித்தல் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் குறித்து நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வழிகாட்டல் அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் கையொப்பதுடன் குறித்த வர்த்தமானி வெளியாகியிருந்ததுடன், வர்த்தமானி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவரையான நடைமுறை உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 82 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 664 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 625 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அவர்களில், இன்னும் நான்காயிரத்து 96 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 459 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.