கொரோனா தொற்றால் யாழ் பெண் உயிரிழப்பு -
15 Feb,2021
கோவிட் - 19 தொற்றால் ஏழு பேர் உயிரிழந்துள்ளமையை நேற்றைய தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அத்துடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கோவிட் - 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 397 ஆகும்.
இவ்வாறு பதிவாகியுள்ள ஏழு மரணங்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி உயிரிழந்தார்.
தீவிர கோவிட் நிமோனியா நிலைமையே அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.