இன்று திடீரென நாடாளுமன்றிற்குள் பிரவேசித்த கோட்டாபய
11 Feb,2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்திற்கு சென்று சபை அமர்வில் பங்கேற்று வருகின்றார்.இன்றைய தினம் சபை அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவும் இன்றைய சபை அமர்வுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துகொண்டுள்ளார்.
இதன் போது, கொழும்பு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில், சபை நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளன.