வழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்ததும் அமெரிக்கா செல்லும் திட்டத்தில் பசில்
03 Feb,2021
தனக்கு எதிரான வழக்குகள் அனைததும் முடிவுற்ற பின்னர் உடனே தான் வசிக்கும் அமெரிக்கா நோக்கிச் செல்ல பசில ராஜபக்ஷ தயாராகி வருவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்ல முயற்சித்து வரும் நிலையில் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகிறது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்துள்ள விசாரணை குழுவின் அறிக்கை வௌியாகி அதில் தனக்கு எதிராக அனைத்து வழக்குகளிலும் விடுதலை கிடைத்தவுடன் நிம்மதியாக அமெரிக்கா செல்ல பசில் ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
20ம் திருத்தம் நிறைவேறிய பின் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகி முக்கிய அமைச்சு பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதுவும் காலதாமதமாகி வருகிறது.
இந்நிலையில் அவர் அமெரிக்கா செல்லும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது