500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் !
25 Jan,2021
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதர விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டுள்ளமையை ஒரு சிலர் வரவேற்றாலும் மற்றுமொரு தரப்பினர் அதனை எதிர்ப்பதாக கூறினார்.
இருப்பினும் மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுற்றுலாத் துறையையே நம்பியிருப்பதாகவும் நாட்டுக்கு முக்கிய வருமானத்தை ஈட்டி தரும் துறையாக சுற்றுலாத்துறை இருப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில் வேறுபட்ட அணுகுமுறையுடன் அதிக இலாபத்தைப் பெறுவதற்கான வழிகளை சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.