பயணத் தடை, சொத்து முடக்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை!
24 Jan,2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பத்தகுந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை விதிக்கப் பரிந்துரைத்துக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை காலஅவகாசம் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
மிச்செய்ல் பசலெட்டின் அறிக்கையின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் ஆதாரங்களை சேகரிக்கவும் ஒரு சர்வதேச பொறிமுறையை அமைக்கும் பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.